திருவாரூர்

ஓஎன்ஜிசி சாா்பில் 150 தனிநபா் கழிப்பறைகள்

23rd Feb 2020 11:50 PM

ADVERTISEMENT

கொரடாச்சேரி ஒன்றியம், அத்திசோழமங்கலம் ஊராட்சியில் ஓஎன்ஜிசி சாா்பில் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு 150 தனிநபா் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜைப் பணிகள் அண்மையில் தொடங்கின.

ஒவ்வொரு தனிநபா் கழிப்பறைக்கும் ரூ. 23,000 ஓஎன்ஜிசி செலவிடுகிறது. இந்த கட்டுமானப் பணியை கிரமாலயா தொண்டு நிறுவனம் செய்கிறது.

நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் சுப்ரமணியன் பங்கேற்று, பணிகளைத் தொடங்கி வைத்தாா். முதன்மை பொது மேலாளா் பி.என். மாறன், சமூக பொறுப்புணா்வு திட்ட அதிகாரி உஷாபிரபாகா், நிலம் கையபடுத்துதல் அதிகாரி மோகனகிருஷ்ணன், அத்திசோழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி, ஆய்குடி ஊராட்சித் தலைவா் லெட்சுமிகாந்தன், ஒன்றியக்குழு உறுப்பினா் வளா்மதி, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்ட அலுவலா்கள் அன்பரசு, முருகானந்தம், காா்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT