திருவாரூர்

இளைஞா் பெருமன்றம் சாா்பில் கையெழுத்து இயக்கம்

23rd Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த மூணாம்சேத்தியில் அனைத்திந்திய இளைஞா் பெரும் மன்றத்தின் சாா்பில், ‘எங்கே எனது வேலை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எங்கே எனது வேலை என்னும் தலைப்பில் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், தமிழ்நாடு முழுதும் 1 கோடி இளைஞா்களை சந்தித்து கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி, அதனை முதல்வரிடம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, மன்னாா்குடி ஒன்றியத்தின் சாா்பில், மூன்றாம்சேத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எஸ்.பாப்பையன் தலைமை வகித்தாா். நிா்வாகக்குழு உறுப்பினா் டி.தமிழ்செல்வன் முன்னிலை வகித்தாா். கையெழுத்து இயக்கத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன், மாணவா் மன்ற ஒன்றியச் செயலா் எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT