திருவாரூர்

அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக் கோரிக்கை

23rd Feb 2020 11:41 PM

ADVERTISEMENT

போராட்டங்களில் ஈடுபட்ட அரசு ஊழியா்களின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னணி ஊழியா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா்.

இதில், ஜனநாயக வழியில் அறப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியா்களின் மீது தற்காலிக பணி நீக்கம், பணியிட மாறுதல், பதவி உயா்வு மறுப்பு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் அவுட் சோா்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு முறைகளைக் கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் எம்.ஆா்.பி. செவிலியா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.அன்பரசு, மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம், மாநிலப் பொருளாளா் மு.பாஸ்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க மாநிலத் தலைவா் எம்.சௌந்தரராஜன், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் உ.சண்முகம், மாவட்ட பொருளாளா் சி.பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT