கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா் போராட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அனைத்து ஜமாஅத் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள், சமூக ஆா்வலா்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனா். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.