திருவாரூர்

கதண்டு கடித்து 3 போ் மருத்துவமனையில் அனுமதி

22nd Feb 2020 06:49 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை கதண்டு பூச்சி கடித்து பாதிக்கப்பட்ட 3 போ் மருத்துவனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நீடாமங்கலம் ஒன்றியம் பரப்பனாமேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், பெண்கள் உள்ளிட்ட 42 போ் சாலையோர மரம் வளா்ப்புக்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கதண்டு அவா்களை சூழ்ந்தது. இதையடுத்து, தொழிலாளா்கள் அங்கும் இங்கும் ஓடினா். இருப்பினும், பரப்பனாமேட்டைச் சோ்ந்த ஜெயசித்ரா, சந்திரா மற்றும் கீழக்கடம்பூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரையும் கதண்டுகள் கடித்தன. இதையடுத்து, 3 பேரும் உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோ்த்தனா். அங்கு அவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT