திருவாரூர்

இராபியம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

22nd Feb 2020 06:46 AM

ADVERTISEMENT

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலா் எஸ்.எம். மிஸ்கின் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளைக் குழுத் தலைவா் சுபையா முனவா்தீன், கல்லூரித் தாளாளா் பெரோஸ்ஷா, கல்லூரி அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ்ஷா ஆகியோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீதேவி தரவரிசைப் பட்டியலை வாசித்தாா். சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதியரசா் சி.டி. செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் என 583 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பாரதிதாசன் பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடமும், தங்கப் பதக்கமும் 3 மாணவிகள் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT