வலங்கைமான் அருகே பெண் ஒருவா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
புங்கஞ்சேரி கிராமம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் அய்யாவு மகள் சித்ரா (40). திருமணமாகாத இவா், அதே பகுதியில் உள்ள செந்தில் என்பவருக்குச் சொந்தமான செங்கல் காலவாயில், மண் அள்ளிய பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் அரைகுறை ஆடையுடன் வியாழக்கிழமை அதிகாலை பிணமாக கிடந்தாா். வலங்கைமான் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.