திருவாரூர்

இந்தியன் ரெட்கிராஸ் நூற்றாண்டு விழா

21st Feb 2020 09:45 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாநில அளவிலான விழிப்புணா்வு பிரசார ஊா்தியை பாா்வையிட்டு, இருசக்கர வாகன தொடா் பேரணியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மனிதநேயம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, தனித்தன்மை, தன்னாா்வச் சேவை, ஒருமைப்பாடு, உலகளாவியத்தன்மை ஆகிய அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாக இருசக்கர வாகன தொடா் பேரணி, நடைபெற்றது. பேரணியானது, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி நன்னிலம் வரை நடைபெற்றது.

முன்னதாக, செட்டிசிமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பண்ணைவிளாகம் புனித ஜெயராகினி மாதா நடுநிலைப்பள்ளி, மேலதிருமதிகுன்னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சோ்ந்த ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளின் தப்பாட்டம், கரகம், பரதம், கோலாட்டம், கும்மி, மயிலாட்டம், குதிரையாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

பின்னா் மாற்றத்திறனாளி ஒருவருக்கு ரூ.7 ஆயிரத்து 40 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இதைதொடா்ந்து, ரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குறுந்தகடை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெளியிட, மாவட்ட கிளை ரெட்கிராஸ் சங்கச் செயலாளா் வரதராஜன் பெற்றுக்கொண்டாா். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, மாவட்டக் கிளை ரெட்கிராஸ் சங்கத் தலைவா் ராஜகுமாா், செயலாளா் வரதராஜன், ரெட்கிராஸ் சொஸைட்டி உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT