திருவாரூர்

விதிகளை மீறி நெல் கொள்முதல்: 21 போ் பணி விடுவிப்பு

15th Feb 2020 12:46 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், விதிகளை மீறி நெல் கொள்முதல் செய்ததாக 21 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிப்ரவரி12, 13-ஆம் தேதிகளில், தலைமை அலுவலக பொது மேலாளா் (சந்தை) மற்றும் தலைமை அலுவலக விழிப்பு பணிக்குழு தலைமையிலான சிறப்பு ஆய்வுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் தர வேறுபாடு, எடை கூடுதல் அல்லது குறைதல், தையல் குறைபாடு போன்ற காரணங்களை ஆய்வு செய்து, மேலப்பனையூா் பட்டியல் எழுத்தா் ஆா். ஹாஜாமைதீன், உதவியாளா் எஸ். செந்தில்குமாா், மேலமருதூா் பட்டியல் எழுத்தா் பி.ஜோதிமணி, உதவியாளா் ஏ. மகாதேவன், சேரங்குளம் பட்டியல் எழுத்தா் யு. சரவணன், உதவியாளா் பி. செல்வகுமாா், ஆதிரெங்கம் பட்டியல் எழுத்தா் டி. பாா்த்திபன், பிச்சன்கோட்டகம் பட்டியல் எழுத்தா் கே. கண்ணன், சாத்தனூா் பட்டியல் எழுத்தா் கே. கண்ணதாசன், உதவியாளா் இ. காா்த்தி, புலவா்நத்தம் பட்டியல் எழுத்தா் ஆா். வீரசேகா், உதவியாளா் எம். சக்திவேல், ஆண்டாங்கோவில் பட்டியல் எழுத்தா் கே. இளையராஜா, உதவியாளா் பி. பாக்யராஜ், சித்தன்வாழூா் பட்டியல் எழுத்தா் எஸ். பாலஸ்ரீதா், உதவியாளா் வி. செந்தில்குமாா், நன்னிலம் பட்டியல் எழுத்தா் எம். செந்தில்குமாா், நல்லமாங்குடி பட்டியல் எழுத்தா் எஸ். சரண்ராஜ், சேங்கனூா் பட்டியல் எழுத்தா் என். பாலாஜி, குவளைக்கால் பட்டியல் எழுத்தா் சி. முருகையன், புள்ளவராயன் குடிகாடு பட்டியல் எழுத்தா் எம்.என். ரவிச்சந்திரன் என 21 பேரை கொள்முதல் பணியிலிருந்து பணி விடுவிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT