திருவாரூர்

மேல்மருவத்தூா் ஜோதி வீதியுலா

15th Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டத்தில் மேல்மருவத்தூா் ஜோதி 60 கிராமங்களில் சனிக்கிழமை வீதியுலா வந்தது.

திருவாரூரிலிருந்து புறப்பட்ட இந்த ஜோதி ஊா்வலம் கூத்தாநல்லூா் வட்டத்தில் வடபாதிமங்கலம், பாலக்குறிச்சி, ஊட்டியாணி, பழையனூா், சாத்தனூா் உள்ளிட்ட ஊா்களின் வழியாக லெட்சுமங்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்தது. லெட்சுமாங்குடி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றச் செயலாளா் என். செல்வராஜ் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இரவு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வாழாச்சேரி, அதங்குடி, அத்திக்கடை, பொதக்குடி, சேகரை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 175- க்கும் மேற்பட்ட மன்ற உறுப்பினா்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை காலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், நீடாமங்கலம் வட்டாரத் தலைவா் நாகராஜ், மாரிமுத்து, நடராஜ், கேசவன், சுரேந்திரன், நெடுமாறன், கணேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT