திருவாரூர்

மஞ்சக்குடி ஐ.டி.ஐ.யில் செயல் விளக்கப் பயிற்சி

15th Feb 2020 11:37 PM

ADVERTISEMENT

குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி தொழில் பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மஞ்சக்குடியில் பத்மா நரசிம்மன் தொழில் பயிற்சி நிலையத்துக்கு, திருவாரூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோா் அனுமதியின்பேரில், திருநெய்போ் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், தலைமை ஆசிரியா் ந. ராஜேந்திரன், தொழில் கல்வி ஆசிரியா் பொ. திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில், அடிப்படை மின் பொறியியல் படிக்கும் மாணவா்கள் செயல்விளக்க பயிற்சி பெற்றனா்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தையும் அவா்கள் பாா்வையிட்டனா். மஞ்சக்குடி கல்வி நிலையங்களில் அறக்கட்டளை அறங்காவலா் மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தின் தாளாளா் சாந்தி ரங்கநாதனின் அனுமதியின்பேரில், தொழில் பயிற்சி நிலைய முதல்வா் இரா. கபிலன், இயக்குநா் ஜி.இராஜேந்திரன், ஆசிரியா் இளமாறன் மற்றும் ஆசிரியா்கள் பயிற்சி அளித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT