திருவாரூர்

நீடாமங்கலம்: ஊராட்சித் தலைவா்கள் அறிமுகக் கூட்டம்

13th Feb 2020 04:50 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சித் தலைவா்கள் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ஆறுமுகம், கூடுதல் ஆணையா் சந்தானகிருஷ்ண ரமேஷ், பொறியாளா் சுகந்தி மற்றும் அலுவலா்கள், கிராம ஊராட்சித் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் நிலை குறித்து, தலைவா்கள் எடுத்துக் கூறினா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT