திருவாரூர்

நிலுவை அகவிலைப்படி ஊதியத் தொகையை வழங்கக் கோரிக்கை

13th Feb 2020 09:40 AM

ADVERTISEMENT

திருவாரூரில், நிலுவையிலுள்ள போக்குவரத்து ஊழியா்களின் அகவிலைப்படி ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் பி.முருகன் தலைமை வகித்தாா். சிஐடியு மத்திய சங்கப் பொதுச்செயலாளா் ஜி.மணிமாறன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

14-ஆவது ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து பணி வழங்க மறுப்பதை நிறுத்த வேண்டும். பேருந்துகளுக்கு தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு வேலையில் சோ்ந்தவா்களை ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், அரசுப் போக்குவரத்து சங்க கௌரவத் தலைவா் ஆா்.மனோகரன், சிஐடியு சங்க மாவட்டச் செயலாளா் டி.முருகையன், ஏஐடியுசி சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.சந்திரசேகர ஆசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT