திருவாரூர்

சிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப் பேரவையில் தீா்மானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

13th Feb 2020 09:36 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் திருவாரூா் மாவட்டத் தலைவா் எம். முகமது பாசித் வெளியிட்ட அறிக்கை:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை 11 மாநில முதல்வா்கள் எதிா்த்து வருகின்றனா். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆா்.சி, என்.பி.ஆா் போன்றவைகளை எதிா்த்து புதுச்சேரி மாநில சட்டப் பேரவையில், தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, ஏற்கெனவே வாக்களித்தபடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளாா்.

ADVERTISEMENT

அவரது இந்த செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டுகிறது. மேலும், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT