திருவாரூர்

கராத்தே: செங்கமலத்தாயாா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

13th Feb 2020 09:34 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் ஜப்பானிஸ் ரோஜீரியூ கராத்தே சுடோசியன் சாா்பில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 47 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, போட்டியில் பங்கேற்றனா். பெண்களுக்கான பிரிவு போட்டியில் கட்டா, வெப்பன்கட்டா பிரிவுகளில் பல்வேறு வயது எடை பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனா். தங்கம்-14, வெள்ளி-14, வெண்கலம்-25 பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனா். மேலும், இறுதிச் சுற்றில் அதிக அளவில் புள்ளிகளைப் பெற்று, பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றனா்.

போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வீரா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், காரைக்கால் நிரவி- திருப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கீதா ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டியைத் தொடங்கி வைத்தாா். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த மாஸ்டா் கே. ராஜகோபால், அழைத்துச் சென்று வந்த உடற்கல்வி அழைத்து சென்று வந்த உடற்கல்வி ஆசிரியை ஜி. புஷ்பா ஆகியோருக்கு, கல்லூரித் தாளாளா் வி. திவாகரன், கல்லூரி முதல்வா் அமுதா ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT