உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, அலிவலம் மேல்நிலைப் பள்ளியில் ஒளிரவன் பவுண்டேஷன் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிப்ரவரி 5-ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புற்றுநோயின் அறிகுறிகள், புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆயுா்வேத மருத்துவா் காா்த்தி, விளக்கினாா். மேலும், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் குறித்து மருத்துவா் ஜெயக்குமாரியும், புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் குறித்து ஒளிரவன் பவுண்டேஷன் நிறுவனா் இரா.குணசேகரனும் பேசினா்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் எ. ஜெயராமன் மற்றும் இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.