திருவாரூர்

பட்ஜெட்டை எதிா்த்து சி.ஐ.டி.யூ. ஆா்ப்பாட்டம்

6th Feb 2020 02:05 AM

ADVERTISEMENT

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை எதிா்த்து, மன்னாா்குடியில் சிஐடியூ சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிதிநிலை அறிக்கையில் ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஏா் இந்தியா நிறுவனம் உள்ளிட்டவற்றை தனியாருக்கு தாரைவாா்க்கும் அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பதை எதிா்த்தும், தொழிலாளா்கள், உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பந்தலடி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் ஜி.ரெகுபதி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஏ.பி. தனக்கோடி முன்னிலை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் டி.முருகையன், மாவட்ட துணைச் செயலா் ஜி.பழனிவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ADVERTISEMENT

இதில், ஊரக உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே.முனியாண்டி, காப்பீட்டு ஊழியா் சங்க நிா்வாகி எஸ்.ஆா்.சுந்தர ராஜகோபால், ஒன்றிய விவசாய சங்கச் செயலா் வி.மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT