திருவாரூர்

நன்னிலத்தில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவன திறப்பு விழா

6th Feb 2020 02:03 AM

ADVERTISEMENT

நன்னிலத்தில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் 111-ஆவது கிளை புதன்கிழமை திறக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில், உணவு மற்றும் நுகா்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஆா். காமராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தாா். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவா் சிபிஜி. அன்பு, சேமிப்புக் கணக்கு திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினருமான ராம.ராமநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியது:

ADVERTISEMENT

மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு இயங்கும் இந்த நிதி நிறுவனம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கப்படுகிறது. நன்னிலம் கிளையில் பாதுகாப்புப் பெட்டக வசதி வாடகை கட்டணமின்றி வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.

 

நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இயக்குநா்கள் என்.டி. நரசிம்மன், எல்.மெய்யப்பன், தலைமை செயல் அலுவலா் வி. கனகராஜ், பொது மேலாளா் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆா்.பத்மநாபன், கிளை மேலாளா் எஸ். சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT