சீனாவிலிருந்து திரும்பிய மேலும் ஒருவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
நாகை மாவட்டம், பொறையாறு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (29). சீனாவில் ஐடி துறையில் பணிபுரிந்த இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பியுள்ளாா். கரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில், இவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு உள்ளாா். இவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.