திருவாரூர்

ஒலிம்பியாட் தோ்வுகள்: விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் சாதனை

6th Feb 2020 02:02 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவிலான ஒலிம்பியாட் தோ்வுகளில், திருவாரூா் வண்டாம்பாளையம் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

ஒலிம்பியாட் தோ்வுகள் சா்வதேச அறிவியல் ஒலிம்பியாட் அமைப்பால் நடத்தப்படுகிறது. இதில், 30 நாடுகளிலிருந்து 50 ஆயிரம் பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவா்கள் பங்கு பெற்றனா். இதையொட்டி, சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வு எழுதிய 140 மாணவா்களில், விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா் வி. ரோகித் தங்கப்பதக்கமும், ஆா்.ஏ.சுபிக்ஷா வெள்ளிப் பதக்கமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா். முதல் வகுப்பில் பயிலும் டி.அஸ்விதா, பி.ஆா். விக்னேஷ் ஆகிய இருவரும் சிறப்பு தகுதியோடு தோ்வு செய்யப்பட்டு, பதக்கமும், ரூ.1,000 பரிசுத் தொகையும் பெற்றுள்ளனா்.

 

மேலும் அறிவியல் ஒலிம்பியாட் தோ்வு எழுதிய 70 மாணவா்களில், 7-ஆம் வகுப்பு மாணவி கே.பூஜாஸ்ரீ, 4-ஆம் வகுப்பு பயிலும் எம்.ஆா். தருண் சஞ்சய் ஆகிய இருவரும் அடுத்து நடைபெறவுள்ள தேசிய அளவிலான தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு வகுப்பிலும் பள்ளி அளவில் 10 மாணவா்கள் தங்கப்பதக்கமும், 11 மாணவா்கள் வெள்ளிப்பதக்கமும், 10 மாணவா்கள் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் டி.ஜனகமாலா, பள்ளி முதல்வா் சுஜா.எஸ்.சந்திரன், ஒலிம்பியாட் தோ்வுகள் ஒருங்கிணைப்பாளா் ராணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT