திருவாரூரில், ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா், வடக்கு வடம்போக்கி தெருவைச் சோ்ந்தவா் சபாபதி மகன் நாராயணன் (55). மருத்துவப் பிரதிநிதியான இவா், திருவாரூா் ரயில் நிலையத்தில் 2-ஆவது நடை மேடையில் இருந்து முதல் நடை மேடைக்கு வருவதற்காக, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மன்னாா்குடி-பகத் கி கோதி விரைவு ரயிலில் ஏறியுள்ளாா். அப்போது, ரயில் புறப்பட்டதால், நிலை தடுமாறி, நாராயணன் கீழே விழுந்து விட்டாராம். இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.