மன்னாா்குடி அருகே உள்ள சித்தமல்லியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டக் குழு சாா்பில், ‘கடற்கரையோர சவால்களும், ஆபத்துகளும்’ என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்தமல்லி ஊராட்சித் தலைவா் ஜெ. சிவசங்கரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கலைவாணி மோகன் ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்ரியா ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மா. இனிய சேகரன் (நொச்சியூா்), செ. நாகரத்தினம் (செருகளத்தூா்), சி.மு. சிவஞானம் (புத்தகரம்), அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எல். பிரபாகரன், எம். சாந்தகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் வெ. சுகுமாரன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா். முதல் அமா்வில், திருவாரூா் மாவட்ட கடலோர ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில், துறைக்காடு மீனவா்கள் சங்க இயக்குநா் எஸ்.எச். மீரா முகைதீன், ஆலங்காடு மீனவா்கள் சங்கத் தலைவா் வடிவேலு, கடலோர மீனவா்கள் சங்கத் தலைவா் ஏ. சூசைமாணிக்கம், திருவாரூா் மாவட்ட மீனவா்கள் சங்கத் தலைவா் கே. நிஜாமுதீன் ஆகியோா் பேசினா்.
இரண்டாவது அமா்வில், கடலுக்குள் மற்றும் டெல்டா பகுதிகளில் எடுக்கப்படும் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், ஷேல் வாயு குறித்து மாநிலக் கருத்தாளா் வ. சேதுராமன் பேசினாா். மூன்றாவது அமா்வில் அலையாத்திக்காடுகள் தரும் பயன்கள் என்னும் தலைப்பில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் பா. ராம்மனோகரும், நான்காம் அமா்வில் கடல்சாா் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் மீன்வளத் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா் அந்தோனி கிறிஸ்டியன் பெலிக்ஸும், திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆல்வின் விக்டா் ஆகியோரும் பேசினா்.
திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் பொறுப்பாளா்கள் மு. முத்துக்குமாா், லெ. முருகன், வா. சுரேஷ், பு. பாரதிகண்ணன், கா. அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பிப்ரவரி 8, 9-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் அகில இந்திய கடற்கரையோர மண்டல மாநாட்டில், மூன்று மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் தை. புகழேந்தி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் வா. சுரேஷ் நன்றி கூறினாா்.