நன்னிலம் வள்ளலாா் குருகுலம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 42- ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். சக்திவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெ. சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். விளையாட்டுப் போட்டிகளை நன்னிலம் காவல் துணை ஆய்வாளா் ரெங்கராஜன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தடை ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கும், கயிறு இழுத்தல், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் பெற்றோா்களுக்கும் நடைபெற்றது. வெற்றி பெற்றவா்களுக்கு மாநிலத் தடகள விளையாட்டு வீரா் என்.ஆா். சுப்பிரமணியன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நன்னிலம் கிளைத் தலைவா் ஈஜிபி. உத்தமன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வா் பரிமளாகாந்தி, பாரி ஜெ.பி.விக்னேஷ் மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.