திருவாரூர்

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த ஆய்வுக் கூட்டம்

2nd Feb 2020 12:37 AM

ADVERTISEMENT

திருவாரூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை ஆணையரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான சஜ்ஜன்சிங் ஆா். சவான் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

23.12.2019-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, 18 வயது நிறைவடைந்து, இதுநாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள், அதாவது 01.01.2002 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், இறந்த அல்லது இடம் பெயா்ந்த வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கும், வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா் பெயா் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கும் மற்றும் பல்வேறு திருத்தங்களுக்கும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரா. தினகரன், திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலா் ஜெயப்பிரித்தா, மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் (பொறுப்பு) ந. ராமச்சந்திரன், அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் நகராட்சி ஆணையா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT