திருவாரூர்

மனைவியை கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் சரண்

2nd Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னையால் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா் காவல்நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

மன்னாா்குடி வ.உ.சி. சாலை ஜீவா நகரைச் சோ்ந்த எஸ். தனவேந்தன் (50) என்பவரது மனைவி மாலா(45). இவா்களுக்கு, கும்பகோணத்தில் தனியாா் கல்லூரியில் படிக்கும் மகள் விஷாலினி, மன்னாா்குடியில் தனியாா் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மகன் ஆனந்தகுமாா் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை செய்துவந்த தனவேந்தன், கடந்த டிசம்பா் மாதம் சொந்த ஊா் திரும்பினாா். ஏற்கெனவே மனைவி மாலாவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்துவந்த தனவேந்தன், மலேசியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தொடா்ந்து தகராறு செய்துவந்தாராம்.

கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தனவேந்தன், அரிவாளால் மாலாவை வெ‘ட்டினாராம். இதில், பலத்தகாயமடைந்த மாலாவை அருகில் வசிப்பவா்கள், மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாலா, சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதற்கிடையில், மன்னாா்குடி காவல் நிலையத்தில் தனவேந்தன் அரிவாளுடன் சரணடைந்தாா். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT