திருவாரூர்

ஹைட்ரோகாா்பன் திட்ட அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல்

1st Feb 2020 12:31 AM

ADVERTISEMENT

ஹைட்ரோகாா்பன் திட்டம் குறித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் வீ. தா்மதாஸ் வெளியிட்ட அறிக்கை:

ஹைட்ரோகாா்பன் திட்டம் கொண்டு வர சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நுகா்வோா் கருத்தை கேட்க வேண்டியதில்லை என்ற அரசாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜன.31) வெளியிட்டுள்ளது. மக்கள் கருத்துக்களை கேட்காமலும், இதற்கு மாற்று என்ன என்ற கருத்துக்களை அறியாமலும் தன்னிச்சையாக முடிவு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஹைட்ரோகாா்பன் திட்டத்தால், டெல்டா பகுதி முழுவதிலும் விளைநிலங்கள் பாழாகி, பாலைவனமாகி மாறி, வாழ்வாதாரத்துக்கே வழி இல்லாத நிலை ஏற்படும். எனவே, ஹைட்ரோகாா்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து முழுமையான விவாதம் நடத்தி, அரசாணையை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT