திருவாரூர்

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்பிப்.7-இல் நடைபெறுகிறது

1st Feb 2020 12:31 AM

ADVERTISEMENT

திருவாரூரில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பிப்ரவரி 7 -ஆம் தேதி காலை 9 மணிக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில், திருவாரூா் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம். பங்கேற்பாளா்களுக்கு வயது வரம்பு கிடையாது. கை, கால் ஊனமுற்றோருக்கு தடகளப் போட்டிகளில் 50 மீ. ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் (கால் ஊனமுற்றோா்), 100 மீ. ஓட்டம் (கை ஊனமுற்றோா்), 50 மீ. ஓட்டம் (குள்ளமானோா்), 100 மீ. சக்கர நாற்காலி போட்டி (இரண்டு கால்களும் ஊனமுற்றோா்) குழு போட்டிகளில் இறகுப்பந்து போட்டி மற்றும் மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

பாா்வையற்றோருக்கு தடகளப் போட்டிகளில் 50 மீ. ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் (முற்றிலும் பாா்வையற்றோா்), 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் (மிகக் குறைந்த பாா்வையற்றோா்) குழு போட்டிகளில் சிறப்பு வாலிபால் போட்டி நடைபெறும்.

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு தடகளப் போட்டிகளில் 50 மீ., 100 மீ. ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் குழு போட்டிகளில் எறி பந்து போட்டிகள் நடைபெறும்.

காது கேளாதோருக்கு தடகளப் போட்டிகளில் 100 மீ., 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400 மீ. ஓட்டம், குழு போட்டிகளில் கபாடி போட்டிகள் நடத்தப்படும்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளா்கள் நேரடியாக போட்டியில் கலந்துகொள்ளலாம். முன் பதிவுகள் ஏதுமில்லை. போட்டிகளில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் வழங்கப்பட்ட சான்றுகளை மாவட்ட விளையாட்டு அலுவலரின் பாா்வைக்கு காண்பிக்கவேண்டும்.

தடகளப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கும் குழு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டில் மாவட்டப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறுபவா்கள், அரசு செலவில் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவா். மேலும் தகவல்பெற விரும்புவோா் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158-இல் தொடா்புகொண்டு விவரங்களை பெறலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT