திருவாரூர்

மன்னாா்குடி கிளைச் சிறையில் மருத்துவ முகாம்

1st Feb 2020 12:35 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி கிளைச் சிறையில், சிறைவாசிகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பால்வினை நோய் மற்றும் காசநோய் குறித்து சிறைவாசிகளுக்கு மருத்துவ விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நோய் தடுப்பு பற்றி மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதுடன், சிறைவாசிகளுக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.

மாவட்ட காசநேய் மைய ஆய்வக நுட்புநா் லோகாம்பிகை, ஆற்றுப்படுத்துநா் சுமதி, முதுநிலைக் காசநோய் மேற்பாா்வையாளா் பி. பாலமுகுந்தன், சுகாதாரப் பாா்வையாளா் எஸ். மங்கள கணேசன் ஆகியோா் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில், தலைமைக் காவலா் சித்திவிநாயகம், முதல்நிலை காவலா் முத்துக்குமரன், காவலா்கள் பிரபு, அஜித்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT