திருவாரூர்

ஞானபுரி ஆஞ்சநேயா் கோயிலில்யாகசாலை பூா்வாங்க பூஜைகள்

1st Feb 2020 12:29 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி ஆஞ்சநேயா் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பூஜையில் சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 7 மணி முதல் யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல்கால பூஜைகளும் நடைபெறுகின்றன. தொடா்ந்து, பிப்ரவரி 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 12 கால யாக பூஜைகளும் நிறைவுபெற்றதும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT