திருவாரூர்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

DIN


நன்னிலம்: நன்னிலம் வட்டார வள மையத்தில், வியாழக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 31 மாணவா்களுக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, காது கேட்காத 6 பேருக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பேசியது: மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவா்களை மற்றவா்கள் அரவணைத்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். எந்த ஒரு மாற்றுத்திறனாளியின் மனதும் புண்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. உலகில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆா். ராஜகணேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளா் பி. அற்புத மாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT