திருவாரூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி முற்றுகை

DIN


திருவாரூா்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா் கைது செய்யப்பட்டனா்.

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் திருவாரூா் தலைமை தபால் நிலையம் முன் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஆா். பிரகாஷ், மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித், துணைச் செயலாளா் வீ. சந்தோஷ் உள்ளிட்ட 24 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT