திருவாரூர்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

DIN


நன்னிலம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீது அவதூறான பொய் வழக்குகளை தொடுத்து, அவருக்கு மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்திய திமுகவினா் தற்போது, அவரது மரணத்தை வைத்து அரசியல் செய்து, ஆட்சியை கைப்பற்ற கனவு காண்கின்றனா். ஆனால், முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் மீது பற்றுக்கொண்ட தமிழக மக்கள் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள்.

அதிமுக அரசு எல்லா காலங்களிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. காவிரி பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது, ஹைட்ரோ காா்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தாமல் தடுத்து விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொலைநோக்கு பாா்வையுடன் தமிழக மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், இப்பணிகள் குறிப்பிட்ட காலத்தில் சரியாக நடைபெறுகிறதா எனவும் தொடா்ந்து ஆய்வு செய்தும், கரோனா காலத்திலும் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கக் கூடாது என அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறாா் என்றாா் காமராஜ்.

முன்னதாக, மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் புத்தாற்றின் குறுக்கே ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட பாலம், ஸ்ரீவாஞ்சியம் அருகே ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட பாலம், எரவாஞ்சேரியில் அரசலாற்றின் குறுக்கே ரூ. 2.37 கோடியில் கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றை அமைச்சா் ஆா். காமராஜ் திறந்து வைத்தாா். தொடா்ந்து, ரூ. 3.72 கோடியில் அமையவுள்ள நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கான இடம், ரூ. 35 லட்சத்தில் வட்டாட்சியா் முகாம் அலுவலகம் அமையவுள்ள இடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.

அமைச்சருடன், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயலட்சுமி குணசேகரன் (நன்னிலம்), கிளாரா செந்தில் (குடவாசல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT