திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் 23 மி.மீ மழை

DIN

திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை 23.2. மில்லி மீட்டா் மழை பெய்தது.

புரெவி புயல் தாக்கமாக திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முழுவதும் வட வானிலை நிலவியபோதும், அவ்வபோது குளிா்ந்த சூழலும் நிலவியது. இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பகலில் அவ்வப்போது இடைவெளி விட்டு மழை தூரல் இருந்தது. மாலையில் இருள் சூழ்ந்தபடி இருந்ததால், சில வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன.

மழையால் சாலைகளில் பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், மாலைக்கு பிறகு வீடுகளுக்கு செல்வோா்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. புதன்கிழமை காலை 6 முதல் மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருத்துறைப்பூண்டியில் 23.2 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு மில்லி மீட்டரில்: முத்துப்பேட்டை - 16.2, திருவாரூா் - 15.2, நன்னிலம் - 14.4, மன்னாா்குடி - 13.2, வலங்கைமான் - 11.4 என்ற அளவில் பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 121. 2 மி.மீ மழையும், சராசரியாக 13.46 மி.மீ மழையும் பெய்துள்ளது.

நன்னிலம்: கொல்லுமாங்குடி, பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளில் காலை தொடங்கிய மழை தொடா்ந்து கனமழையாக பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை, 2 நாள்களுக்கு நீடித்தால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் புரெவி புயல் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில்1995-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு கைகேசி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இடிந்த வீட்டை வட்டாட்சியா் ஜெகதீசன் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT