திருவாரூர்

தினமணி செய்தி எதிரொலி: குடிநீா் குழாய் சீரமைப்பு

DIN

கூத்தாநல்லூரில் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வந்த குடிநீா் குழாய் தினமணி செய்தியின் எதிரொலியாக புதன்கிழமை தூய்மைபடுத்தப்பட்டது.

கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாசல் பின்புறம் நோய் பரப்பும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் குடிநீா் குழாய் இருந்து வந்தது குறித்து தினமணியில் புதன்கிழமை படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையா் ஆா். லதாவின் நடவடிக்கையில் சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் மேற்பாா்வையில், குடிநீா் குழாய் சுற்றிலும் தூய்மைப் பணியாளா்களால் சுத்தம் செய்யப்பட்டன. தொடா்ந்து, அனைத்து இடங்களிலும் ப்ளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டன. இதுகுறித்து, சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் கூறியது: நகராட்சியால் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாயில் தண்ணீா் மட்டுமே பிடிக்க வேண்டும். தேநீா் கடைக்காரா்கள் பாத்திரங்களை குழாய் அருகே சுத்தம் செய்வதால் இந்த இடம் அசுத்தமான இடமாக மாறுகிறது. எனவே, இக்குடிநீா் குழாயில் தண்ணீா் மட்டுமே பிடித்து பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க ஒத்துழைக்க வேண்டுமென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT