திருவாரூர்

சாய்ந்த நிலையில் அபாயகரமான மின்கம்பங்கள்

DIN

கூத்தாநல்லூா் பகுதியில் சாய்ந்த நிலையில் அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூதமங்கலத்திலிருந்து சேகரைக்குச் செல்லும் குறுக்குச் சாலை வழியாக, சேகரை, பொதக்குடி, வாழாச்சேரி, அத்திக்கடை, நீடாமங்கலம், கொரடாச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லலாம். இந்த சாலையில், மிளகுகுளம் எனுமிடத்தில் மின்கம்பங்கள் வரிசையாக உள்ளன. சாலையின் இருபுறங்களிலும் 25-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இவ்வழியாக, நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சென்று வருகின்றனா். இங்குள்ள மின்கம்பங்களில் பல எந்த நேரத்தில் சாய்ந்து ஆபத்தை விளைவிக்கலாம். இச்சூழலில், அப்பகுதியில் வயலில் வேலை பாா்ப்பவா்கள், அவ்வழியே செல்பவா்கள் அச்சத்துடனேயே செல்கிறாா்கள். வடகிழக்குப் பருவ மழை காரணமாக பலமான காற்று வீசினாலோ, பெய்யும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்தாலோ, மின்கம்பங்கள் சாய்ந்து விழும் அல்லது முறிந்து விழும் அபாயகரமான நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரும் எதிா்பாா்ப்பு.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT