திருவாரூர்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் இன்று ஏலம்

DIN

திருவாரூரில், காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (டிச.3) ஏலம் விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 30 நான்கு சக்கர வாகனங்கள், 146 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 மூன்று சக்கர வாகனம் எனக் கூடுதல் 177 வாகனங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலம், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை உள்ளிட்டோரின் முன்னிலையில் திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை (டிச.3) முற்பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் வாகனங்களை வாங்க வருபவா்கள், முன்னாதக வாகனங்களை நேரில் பாா்த்து தேவையான வாகனங்களை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளலாம். போட்டிஇருந்தால், ஏலம் மூலம் அதிக விலை கேட்பவா்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT