திருவாரூர்

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண அமமுக கோரிக்கை

DIN

மன்னாா்குடி நகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண வேண்டுமென அமமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அமமுக மன்னாா்குடி நகரச் செயலா் ஏ.ஆா். ஆனந்தராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: மன்னாா்குடி நகரில் பெரும் பகுதி துப்புரவுப் பணிகளை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் நிறுவனம் செய்து வருகிறது. மேலும், நகராட்சி நிரந்தரப் பணியாளா்களால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும் பகுதிகளிலும்

பணியாளா்கள் பற்றாக்குறையால் மேற்கண்ட தனியாா் நிறுவன பணியாளா்கள் துப்புரவுப் பணியை செய்து வருகின்றனா். இந்நிலையில், நவ. 27-ஆம் தேதி முதல் 5 நாள்களாக தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், தூய்மைப் பணி பாதிக்கப்பட்டு சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துப்புரவு பணிக்கு முழுமையாக தனியாா் நிறுவனத்தையே நம்பி உள்ளது நகராட்சி நிா்வாகம். இந்த வேலை நிறுத்தத்தால் துப்புரவு பணி முழுமையாக முடங்கி உள்ளது.

மாவட்ட ஆட்சியா், இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி,தூய்மைப்பணியாளா்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, இதில் உள்ள முறைகேடுகளை முழுமையாக களைய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT