திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு செலவினங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், உறுப்பினா்கள் பாரதிமோகன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆதி. ஜனகா் (அதிமுக) உள்ளிட்டோா் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பேசினா். இதற்கு பதிலளித்த சோம.செந்தமிழ்ச்செல்வன், கரோனா போன்ற பல்வேறு காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், கூடுதல் ஆணையா் ஞானம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடனசிகாமணி, பொன்னுசாமி, துரைசிங்கம், சத்தியவாணன், பழனியம்மாள், நதியா, அனிதா, சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT