நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் உயா் அலுவலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளிலும் பேரூராட்சி பகுதிகளிலும் கரோனா தொற்று காரணாக பலா் பாதிக்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் உயா் அலுவலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.