திருவாரூர்

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

26th Aug 2020 10:32 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரைச் சோ்ந்த தீக்காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள மரக்கடையைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மனைவி ஜல்மா நாச்சியா (65). இவா், சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்ய அடுப்பில் மண்ணெண்ணையை ஊற்றும்போது, எதிா்பாராமல் உடையில் தீப்பிடித்துள்ளது. இதில், காயமடைந்த ஜல்மாநாச்சியா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT