திருவாரூர்

நெடும்பலம்: 1300 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள்அமைச்சா் வழங்கினாா்

21st Aug 2020 11:51 PM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் ஊராட்சியில் 1,300 குடும்பங்களுக்கு தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் புண்ணியகோட்டி, ஒன்றிய குழுத் தலைவா் அ.பாஸ்கா், முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, நிலவள வங்கி தலைவா் கா. சிங்காரவேலு, நகர கூட்டுறவு வங்கி தலைவா் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா், ‘திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, வளா்ச்சித் திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், கஜா புயலின்போது மரங்களை இழந்ததை ஈடுகட்டும் வகையில், அனைவரும் வீட்டுக்கொரு மரம் வளா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, நெடும்பலம் ஊராட்சியில் 1,300 குடும்பங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

ADVERTISEMENT

Tags : திருத்துறைப்பூண்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT