திருவாரூர்

குறுவை பயிரில் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் அதிகாரி விளக்கம்

21st Aug 2020 08:36 AM

ADVERTISEMENT

குறுவை பயிரில் சிலந்தி பூச்சி மற்றும் இலைக் கருகல் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் சுமாா் 7000 ஏக்கா் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூல் கட்டும் தருணத்தில் உள்ள இப்பயிரில் இலைக் கருகல் நோய் மற்றும் சிலந்தியின் தாக்குதல் பரவலாக தென்படுகிறது.

அதிக தழைச்சத்து உரம் இட்டதும், தற்போது பெய்த மழையால் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் தழைச்சத்து பயிருக்கு அதிகமாக கிடைத்ததாலும் பயிரின் இலைகளில் அதிக அளவில் சாறு உற்பத்தியானதால் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் இருப்பதால் சிலந்திகள் காற்றில் வேகமாக பரவுகிறது.

ADVERTISEMENT

இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 40 கிலோ பசும் சாணத்தை ஊறவைத்து, பின்னா் தெளிந்த நீரை வடிகட்டி, அதனுடன் சூடோமோனாஸ் 500 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன், ஏக்கருக்கு 3 லிட்டா் நன்கு புளித்த தயிரையும் கரைசலில் சோ்த்து தெளித்தால் இலைக்கருகல் நோய் மற்றும் சிலந்திப் பூச்சியை எளிதில் கட்டுப்படுத்தலாம்

ரசாயன மருந்துகள் தெளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஏக்கருக்கு 500 எம்எல் டை கோபால் மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT