திருவாரூர்

அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.3.71 கோடி ஒதுக்கீடு

21st Aug 2020 08:36 AM

ADVERTISEMENT

திருவாரூரில் அரசு மானியத்துடன் வேளாண்மை இயந்திரங்கள் வழங்க ரூ.3.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிா் சாகுபடி செய்ய ஏதுவாக, வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வட்டாரஅளவில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ.25 லட்சத்தில் அமைக்க, ஏதுவாக 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற, உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும், தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்யலாம்.

வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற ஏதுவாக, 55 டிராக்டா்கள், 34 பவா்டில்லா்கள், 8 நடவு இயந்திரங்கள், 12 ரோட்டோவேட்டா்கள், 8 வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள, நிகழாண்டில் ரூ.3.30 கோடி, 4 வாடகை மையங்கள் அமைக்க ரூ. 40 லட்சம் என மொத்தம் ரூ.3.71 கோடி திருவாரூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வட்டார வாரியான இலக்கு ஆக.21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, உதவிசெயற்பொறியாளா்(வே.பொ), பவித்திரமாணிக்கம், திருவாரூா். உதவிசெயற்பொறியாளா் (வே.பொ), அந்தோனியாா் கோவில் தெரு, மன்னாா்குடி ஆகிய அலுவலகங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT