திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராந்தி அரசு விதைப் பண்ணையில் சம்பா நேரடி விதைப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கீராந்தி அரசு விதைப் பண்ணையில் உள்ள 47.85 ஏக்கா் நிலத்தில் நேரடி விதைப்பு இயந்திரம் கொண்டு சம்பா பருவ விதைப்பு பணியை வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா் ஆலோசனையின் பேரில், துணை இயக்குநா் உத்திராபதி தொடங்கி வைத்தாா்.
இதில், வேளாண்மை உதவி இயக்குனா் சாமிநாதன், வேளாண்மை அலுவலா் பாஸ்கா், உதவி வேளாண்மை அலுவலா் தினேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.