திருவாரூர்

திருவாரூா்: 4 காவலா்கள் உள்பட 27 பேருக்கு கரோனா; ஒருவா் உயிரிழப்பு

14th Aug 2020 08:48 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் 4 காவலா்கள் உள்பட 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. ஒருவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,119 ஆக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் 1 பெண் காவலா் உள்பட 4 காவலா்களும் அடங்குவா். அத்துடன், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2146 ஆக உயா்ந்துள்ளது. மேலும், திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 60 வயது பெண், கரோனா தொற்று காரணமாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இவா், புதன்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT