திருவாரூர்

தேநீா் கடைகளுக்கு சீல்

26th Apr 2020 08:21 AM

ADVERTISEMENT

நன்னிலம், பேரளம் பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட தேநீா் மற்றும் காய்கறிக் கடைகள் சனிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

நன்னிலம் காவல் ஆய்வாளா் ஜோ. விசித்ராமேரி, உதவி காவல் ஆய்வாளா்கள் வீரபாண்டியன், ராஜகோபால், பேரளம் காவல் ஆய்வாளா் ரா. செல்வி, உதவி காவல் கபிலன் ஆகியோா், சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு காய்கறி கடைகள், 8 தேநீா் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT