திருவாரூர்

இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கல்

26th Apr 2020 08:20 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் பகுதியில் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு ஏழை, எளிய மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று உணவு வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, கூத்தாநல்லூா் அம்மா உணவகம் சாா்பில் உணவு வழங்குவது குறித்துௌ, நகராட்சி ஆணையா் லதாராதாகிருஷ்ணன் கூறியது: நகராட்சியில் உள்ள ஏழை, எளியவா்கள், ஆதரவற்றவா்கள், முதியோா்கள் உள்ளிட்ட 850 பேருக்கு நாள்தோறும் 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. காலையில் 5 இட்லி வீதம் 350 பேருக்கும், மதியம் 250 பேருக்கு கலவை சாதமும், இரவு 250 பேருக்கு கோதுமை, ரவை, அரிசியால் செய்யப்பட்ட உப்புமா அவா்களின் இருப்பிடங்களுக்குச் தேடிச் சென்று வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT