திருவாரூர்

ஊரடங்கு உத்தரவு மீறல்: 7,676 போ் கைது

20th Apr 2020 02:39 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,676 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேவையின்றி வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி, அவசியமின்றி சாலைகளில் நடமாடியதாக 346 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், 326 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு அமலானது முதல் இதுவரையிலும் திருவாரூா் மாவட்டத்தில், தேவையின்றி சாலைகளில் நடமாடியதாக 7,609 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 7,676 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 7,044 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT