திருவாரூா் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,078 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஊரடங்கு உத்தரவை மீறி, திருவாரூா் மாவட்டத்தில் சாலைகளில் நடமாடியதாக 308 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அத்துடன், 317 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதாக திருவாரூா் மாவட்டத்தில், இதுவரையிலும் 4026 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4078 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 3748 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளியிடங்களில் நடமாடியதாக தனிமைப்படுத்தப்பட்ட 18 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.