திருவாரூர்

144 தடை உத்தரவை மீறியதாக 2017 போ் கைது

5th Apr 2020 12:07 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரையில் 2017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தி வருகின்றன. இதையொட்டி, தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தததாக, வெள்ளிக்கிழமை 339 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 305 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவை மீறியதாக, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 1995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். மேலும், 1875 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 18 போ் வெளியிடங்களில் சுற்றித்திரிந்ததையடுத்து அவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT